tamilnadu

img

உன்னாவ் இளம்பெண் மீது லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி!

லக்னோ:
த்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கார். 51 வயதான இவரும், இவரது சகோதரர் அதுல் சிங்கும் சேர்ந்து, உன்னாவ் நகரைச் சேர்ந்த சுரேந்திரா சிங் என்பவரின் 17 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். 

அத்துடன், நியாயம் கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை சுரேந்திரா சிங்கை அடித்துக் கொலையும் செய்தனர்.இந்த சம்பவத்தில், எம்எல்ஏ-வின் தம்பி,அதுல் சிங்கை மட்டும் கைது செய்த போலீசார், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீதுவழக்குக் கூட பதிவு செய்யாமல் விட்டு விட்டது.நீண்ட போராட்டத்திற்குப் பின்பு, அலகாபாத் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே,செங்கார் கைது செய்யப்பட்டு, சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது குல்தீப் சிங் செங்கார் மீதானவல்லுறவுக் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ள சிபிஐ, அதுதொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. செங்கார் தொடர்ந்து சிறையிலேயேஇருந்து வருகிறார்.இந்நிலையில்தான், பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

குல்தீப் சிங் செங்காரால் பாதிக்கப் பட்ட பெண், தனது தாயார், வழக்கறிஞர், மற்றும் பெண் உறவினர் ஒருவருடன் சேர்ந்துகாரில் ரேபரேலி நோக்கி சென்றுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி, காரின் மீது மோதியுள்ளது.இதில், தாயாரும், உறவினரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட, பாஜக எம்எல்ஏ-வுக்கு எதிராக வழக்கு தொடுத்த பெண்ணும், வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, நடந்தது விபத்தல்ல; திட்டமிட்ட சதி என்று பாதிக்கப்பட்ட பெண் ணின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.அதற்கேற்ப, கார் மீது மோதிய லாரியின் வாகனப் பதிவு எண் எழுதப்பட்டுள்ள தடம்கறுப்புப் பெயிண்ட்டால் அழிக்கப்பட்டு இருப்பதும், சம்பவம் நடந்தபோது, உன்னாவ் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் அவருடன் செல்லவில்லை என்பதும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.இந்த உண்மைகளை காவல்துறையும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், விபத்துக்கு பின்னால், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.ஏனெனில், உன்னாவ் இளம்பெண் ணின் தந்தை சுரேந்திரா சிங் அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திலும் நேரடி சாட்சி, 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;